‘மூளை; எமது பிரச்சினைகள் சார்ந்தே யோசனை செய்கிறது’ இளம் இயக்குனர் – யுவன்

தலவாக்கலை லோகி தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டுள்ள இளம் கலைஞர் யுவன். 2015 ஆம் ஆண்டு உயர்தர படிப்பை முடித்து பின்பு…

கொவிட் தடுப்பூசி ஆபத்தானதா? விளக்குகிறார் தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர

கொவிட் தடுப்பூசி பற்றி பல்வேறான சந் தேகங்கள் மக்கள் மனங்களில் நிலவும் நிலையில் அவை குறித்த விரிவான விளக்கங்களைத் தருகிறார் சுகாதார…

எனது கருத்துநிலை பொருத்தமான பொழுதொன்றில் அரசியல் வடிவத்தை அடையும்- மனந்திறக்கிறார் முன்னாள் எம்.பி. திலகர்

கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை விடுகிறார்களே அன்றி அதற்கான காரணத்தை கூறுகிறார்கள் இல்லை. அதனால் நானே அதற்கான காரணத்தையும் கூற வேண்டி…

தொழிலாளர் தேசிய முன்னணியின் புதிய பொதுச் செயலாளர் என்ன சொல்கிறார்?

தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளராக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜை நீக்கி…

உணவு ஆடம்பர பொருள் அல்ல என்பதை உணர்த்திய ‘பசித்தவன்’

ஒரு  நேர  உணவுக்காகவே  உடல் களைக்க  உழைக்கின்றோம். ஆனால், அந்த உணவுக்கு நாம் எந்தளவு மதிப்பு கொடுக்கின்றோம் என்பது தான் எமது எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. மாபெரும் விழாக்கள், வைபவங்கள் ஏன் சாதாரண நிகழ்வுகளைக் கூட இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து நடத்துகின்றோம். அதில் விருந்தினர்களை திருப்திப்படுத்துவதற்காக உணவுக்காக  குறைந்தது 75 சதவீதமாவது செலவுகளில்  ஒதுக்கிடுகின்றோம். இவ்வாறு ஒதுக்கி மனமாற உணவு சமைத்தாலும் அதனை முழுமையாக உண்ணாமல் ஆசைக்கு ஒரு கோப்பையை  நிரப்பிக்கொண்டு சாப்பாட்டு மேசைக்கு சென்று அமர்ந்து உண்ணும் போது, அதனை முழுமையாக உண்கின்றோமா? அதில், வயிற்றுக்கு கால் வாசி குப்பைக்கு முக்கால்வாசி என விரையமாக்கப்படுகிறது என்பது தானே உண்மை. இப்போதைய காலத்தில் இது பெஷனாகவும் ஆகிவிட்டது. இவ்வாறு வீசியதன் வலியை கொரோனா காலத்தில் எவரும் உணராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இவையெல்லாம் மனதில் இறுத்தி ‘உணவு ஆடம்பரப் பொருள் இல்லை’ என்ற உணர்வில் எழுந்ததே எங்கள் குழுவினரின் ‘பசித்தவன்’ குறுந்திரைப்படம் என்கிறார் இளம் இயக்குநர் வி.டெனிஸலஸ். ஒரு வேளை உணவு இல்லாதவர்களுக்கே உணவின் அருமை புரியும் என்பதை மிகவும் தத்ரூபமாக விளக்குவதாக  சுமார் 7-10 நிமிடத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறுந்திரைப்படத்தின் கதைக்களம், ஒளி, ஒலி, கதைக் கருப்பொருள் என்பன அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அட்டனிலிருந்து 10 கி.மீ  தூரத்தில் நோட்டன் வீதியில் அமைந்துள்ள ஒஸ்போன் தோட்டத்தில் உள்ள  இளம் இளைஞர்கள் தோட்ட மக்கள் , பாடசாலை ஆசியர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி படப்பிடிப்பை ஆரம்பித்த அதே மாத இறுதியில் நிறைவு செய்துள்ளனர். இந்த குறும்படத்தினை My Friends Productions எனும் YouTube தளத்தில் தரவேற்றி படத்தினை கடந்த 6 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதில் துரதிஸ்டவசமான  சம்பவம் ஒன்று இடம்பெற்றதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும். இக் குறுந்திரைப்படத்தில் நடித்த 12 வயது இளம் கலைஞன் மாணவனாக பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்த  தோபியா எஸ்கர்;, தனது வீட்டில் இரவு ஆழ்ந்த நித்திரையின் பாம்பு கடிக்குள்ளாகி  இம்மாதத்தின் முதல் வாரத்தில் உயிரிழந்தார். இப்பாலகனின் மறைவு செய்தி  பலரது உள்ளங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுதுடன் குறித்த தோட்டத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் மறைவுக்குப் பின்னரே ‘பசித்தவன்’ அதிகம் பார்க்கப்பட்டதாகவும் இது பற்றி பேசப்பட்டதாகவும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இதனை பார்வையிட்டுள்ளனர். ஐந்து கதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கியுள்ள இக்குறும்படத்தில் பிச்சைக்கார கதாப்பாத்திரம் மிகவும் பிரமாதமாகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை இப்படத்திற்கு உயிரோட்டத்தையளித்துள்ளது எனலாம். ஆர்.டிலக்சன், ஏ.சஜன், ஏ.ஜெனிட்டா, ஆர்.தோபியா எஸ்கர், ஆர்.ஜோன் எஸ்கர், எம்.ராஜ்குமார், பி.கவிஸ்கரன், துசியந்தன் ஆகியோர் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாப்பாத்திரமும்; இப்படத்திற்கு உயிரோட்டமாகவே அமைந்துள்ளது. இத்திரைப்படத்துக்கு எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்திற்கும் சொந்தக்காரரான இயக்குனர் வி.டெனிஸ்லஸ்  உடனான உரையாடல் பற்றி இங்கு எமது வாசகர்களுக்காக….…

ஓரிரவில் இலட்சாதிபதியாகி புகழடைந்த 17 வயது மாணவி

விமர்சனங்கள் என்னை மேலும் புடம் போட்டன மார்க்கம் என்ற பெயரில் சேறு பூச முயல்கிறார்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடியும், ஆடியும் புகழ்பெறுபவர்களிடையே…

அரவம் வந்த வீடுதான் வரமாய் வந்ததா?

ஜீவா சதாசிவம் மலையகம் என்றாலே அழகு நிறை தேசம்தான். அதிலும் விடியும் வேளை அந்த சிவனொளி பாத மலையை கண்கொண்டு பார்க்கும்…

பொப்பிசை புகழ் ஏ.ஈ.மனோகரன்

இலங்கையின் பொப்பிசைச் சக்கரவர்த்தி இவ்வுலகை விட்டு பிரிந்து இன்றுடன் இரண்டு வருடங்கள். சுராங்கனி… சுராங்கனி…. என்ற பொப்பிசை பாடல் மூலம் எலகளிவில்…

தனிமனித வாழ்வின் படிப்பினைக்கு அருமையான ஆண்டு 2020!

உலகப் பொருளாதாரம், அரசியல் என்ற பெரிய விஷயங்கள் இவற்றை எல்லாம் தள்ளிவைத்து விட்டு ஒரு மனிதனாக எதற்காக வாழ்கிறோம்? ஏன் வாழ்கிறோம்…

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் சிற்பி முன்னாள் அதிபர் எஸ்.சிவயோகதேவன்

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரின் வரலாற்றில் பல அதிபர்கள் இருந்துள்ளார்கள் . அவர்களின் வழிகாட்டலில் இந்த கல்லூரி பல அபிவிருத்திகளை கண்டாலும்…