ஹப்புத்தளை பொது சுகாதாரப்பிரிவில் இருவருக்கு கொரோனா

எம். செல்வராஜா 

ஹப்புத்தளை பொது சுகாதாரப்பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக, பொது சுகாதாரப்பரிசோதகர் ரோய்விஜயசூரிய தெரிவித்தார்.

ஹப்புத்தளை நகரின் பிரபல ஹோட்டல் விடுதியொன்றின் 25 வயதுடைய ஊழியர் ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதியானதினால், அவர் கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அத்துடன் அவ் ஹோட்டல் விடுதி, தொற்று நீக்கி செயற்பாட்டிற்கு உட்பட்டதுடன், தொடர்ந்து வரும் 14 தினங்களுக்கு ஹோட்டல் விடுதியை மூடிவிட, பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அவ் ஹோட்டல் விடுதியில் பணியாற்றிய 16 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 68 வயதுடைய நபர், பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட வேளையில், அவருக்கு ம் கோவிட் கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவரும் கோவிட் 19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கடந்த 27 ந் திக திபி.சி.ஆர். பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டதையடுத்தே, மேற்படி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக, பொது சுகாதாரப்பரிசோதகர் ரோய்விஜயசூரிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *