போடைஸில் திடீரென உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாய் ; பரிசோதனையில் கொரோனா உறுதி

பொகவந்தலாவ பொதுசுகாதார காரியாலயத்திற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தொழிற்சாலை பிரிவில் கொரேனா தொற்றினால் உயிரிழந்த பெண்ணின் சடலம் 22.02.2021.திங்கட் கிழமை மாலை 05 மணியளவில் நோர்வூட்  தகனசாலையில் சுகாதார முறைமையோடு தகனம் செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொதுசுகாதார அதிகாரிகள்
தெரிவித்தனர்.

கொரேனா தொற்றினால் உயிரிழந்த குறித்த பெண் டிக்கோயா போடைஸ் தொழிற்சாலைபிரிவை சேர்ந்த 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பூங்காவனம்  என பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பெண் கடந்த 16 ஆம் திகதி திடீரென உயிரிழந்துள்ள தாகவும் பெண்ணுக்கு பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகரினால் பி.சி.ஆர் பரிசோதனை
மேற்கொண்டு அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


 வெளியான பி.சி.ஆர்.அறிக்கையின் ஊடாக குறித்த பெண்ணுக்கு
தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு 22.02.2021. திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் பிரேத பரிசோதனை இடம் பெற்றதுடன் சுகாதார முறைமையோடு குறித்த சடலம் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *