பொகவந்தலாவை
பொகவந்தலாவை பொது சுகாதார அதிகாரி பிரிவிற்குற்பட்ட பகுதியில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன் இதுவரையில் 134 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார அதிகாரி வை.எல் .பி பஸ்நாயக்க தெரிவித்தார் .

23/02/2021 வெளியான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையிலே பாடசாலை மாணவர்கள் 06 பேர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதியாது
அட்டன் கல்வி வலயத்திற்குற்பட்ட பொகவந்தலாவை ஹோலிரோசரிஇ சென்மேரிஸ், மற்றும் கெர்கவோல்ட் இலக்கம் 02 வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 பேருக்கு கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கையிலேயே ஹெலிரோஸரியில் தரம் 11 இல் கல்விப்பயிலும் இரண்டு மாணவர்களும் தரம் 02 இல் கல்விப்பயிலும் ஒரு மாணவனும், கெர்க்கஸ்சோல்ட் இலக்கம் 02 இல் கல்விப்பயிலும் மூன்று மாணவர்களும் செப்பல்ட்டன் மற்றும் செல்வகந்தை தோட்டத்தை சேர்ந்த பெற்றோர்கள் 10 பேருமாக 16 பேர் தொற்றுக்குள்ளாகினர்.
இதேவேளை தொற்று உறுதியான பெற்றசோ பிரிட்லோன்ட் பகுதியை சேர்ந்த ஹோலிரோசரியில் தரம் 11 இல் கல்வி பயின்ற மாணவி பொகவந்தலா பாரதிபுரத்தில் வீடொன்றில் தங்கியிருந்தே பாடசாலைக்கு சென்றுள்ளார்.
இந் நிலையில் குறித்த மாணவிக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து வீட்டு உரிமையாளர்கள் அந்த மாணவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொது சுகாதார அதிகாரிகள் மாணவி தங்கியிருந்த வீட்டின் குடியிருப்பாளர் களையும் தொற்றுக்குள்ளான மாணவியையும் சுயதனிமைப்ப டுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான 16 பேரையும் சுயதனிமை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.