புஸ்ஸல்லாவவையில் ஸ்ரீ ஆதியோகி யோகா ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

பா.திருஞானம் 


புஸ்ஸல்லாவ சிவபுரத்தில்  புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்  “தாயுமானனேஸ்வரர்” சிவாலய வளாகத்தில் புதிய ஸ்ரீ ஆதியோகி யோகா ஆசிரமும் அதனுடன் இணைந்தாக ஸ்ரீ நாகபூசனி அம்மன்  ஆலயத்திற்கும் சங்குஸ்த்தாபன நிகழ்வும் இன்று திங்கட்கிழமை இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

புஸ்ஸல்லாவ ஜீவயோகா  ஆதியோகி யோகாரண்ய குருஜி சண்முகம் தனசேகர் ஏற்பாட்டில் கொட்டகலை விஷ்னுபுரம் விஷ்னு கோவில் குருக்கள் சிவகுமார் அவர்களின் தலையில் வினாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் நடைபெற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்த வரலாற்று தெய்வீக நிகழ்வில்  கொழும்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமி அஷ்சராதம்நந்தா மகாராஜ்¸ ஹட்டன் இராஜ இராஜஸ்வரி ஆசிரமம் சுவாமி கணபதியோகி¸ இலங்கை சின்மயா மிஷன் கண்டி வதிவிட ஆசாரியா பிரமசிரி கார்த்திக் சைதன்யா இலங்கை சின்மயா மிஷன் இறம்பொடை வதிவிட பிரமசாரினி தன்வி சைதன்யா¸ இறம்பொடை ஞானவரத ஐயப்ப சன்னிதான மடாதிபதி சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள்¸ ஹட்டன் சின்மயா மிஷன் பிரமசிரி கிருஸ்ண சைத்தன்யா பூண்டுலோயா டன்சினன் மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்முகம்

உட்பட நகர வர்த்தகர்கள் பொது மக்கள் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்து  கொண்டார்கள்.

இங்கு புதிதாக அமைய இருக்கும் யோகாஸ்மரத்தில் ஆலயம்  தியான மண்டபம் ஜீவ யோகா மண்டபம் சைவ முன்பள்ளி   அன்னபூரனி ஆன்மீக தங்குமிட வசதிகள் ஆகிய அமைய உள்ளன.
இங்கு சிறியோர் முதல் பெரியோர்கள் வரைக்குமானவர்களுக்கு  யோகா பயிற்சிகள் பிராண யோகா பயிற்சிகள்  ஆன்மீக பயிற்சிகள் இளைஞர்களுக்கான தலைமைத்துவ சைவ உட்சவங்கள் ஆலயத்தில் விஷேட வைபவங்கள் விஷேட பூஜைகள்  பாலர்களுக்கான பாலர் கல்வி உட்பட சமூகத்திற்கு தேவையான அனைத்து ஆன்மீக செயற்பாடுகளும்  முன்னெடுக்கப்டும்.  ஆக மொத்ததில் இந்த ஸ்ரீ ஆதியோகி யோகா நிலையம் ஒரு ஆன்மீக பயிற்சி நிலையமாக காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *