பதில் அறிக்கை எனும் பெயரில் பிலிப் கூறுவது அவருக்கே சரியென பட்டால் ‘டான்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யுமாறு அந்த நிறுவனத்துக்கு இதேபோல ஒரு துணிந்து ஒரு அறிக்கையோ அல்லது கடிதமோ அனுப்பட்டும்.

அல்லது என்னுடன் நேரடி விவாதம் ஒன்றில் அதே தொலைக் காட்சியில் அவர் கலந்து கொள்ளட்டும். அதனைச் செய்ய எஸ்.பிலிப் தயங்கினால் இந்த அறிக்கை எழுதியது அவரில்லை என்றும் இதில் கூறப்பட்டவை எதுவும் உண்மையில்லை என்றும் நான் உறுதியாக கூறுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் விடுத்திருக்கும் அறிக்கைக்கு பதில் அளித்திருக்கும் திலகராஜ் மேலும் தெரிவித்து இருப்பதாவது,
என்னை கட்சிப் பொதுச் செயலாளர் பதவியில் நீக்கிவிட்டதற்கான காரணத்தை தொழிலாளர் தேசிய முன்னணியினர் குறிப்பிடாதபோது, அதனைக் கேட்ட தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு நான் வழங்கிய பதிலை ஒளிபரப்ப விடாமல் தடுத்ததற்கும் பிலிப் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நான் நன்கறிவேன்.
நான் காரணத்தை கூறிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை ‘பதிவு’ செய்த தொலைக்காட்சி நிறுவனத்தவர்கள் காலில் திரு.பிலிப் அவர்கள் விழாததில் எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது.ஏனெனில் அவர் மீது எப்போதும் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையக கட்டடம் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்தும் வி.கே.வெள்ளையன் உருவாக்கிய அதே கட்டடத்தில் இயங்கும் என அதன் பொதுச் செயலாளர் விடுத்திருக்கும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அவரே அமரர் வி.கே.வெள்ளையன் பெயரைக் குறிப்பிட்டு பதில் அறிக்கை எழுதி இருப்பதனால் அவர் வெள்ளையனின்ஆன்மா மீது ஆணையாக அதனை எழுதி இருப்பார் என நம்புகிறேன்