நோர்வூட் தவிசாளர் கைது செய்யப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழந்தைவேலை கைது செய்து சட்டத்தின்முன் முன் நிறுத்துமாறு கோரி பொகவந்தலாவ லெச்சுமிதோட்ட மத்திய பிரிவு மக்கள் 30.01.20201. சனிக்கிழமை காலையில் இருந்து ஆர்ப்பாட்டம் மொன்றை முன்னெடுத்தனர்.

 நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் ரவி குழுந்தை வேல்பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் 319 ஜி கிராம சேவகர் பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தரை பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் பிரத்தியோக செயலாளர் சுப்பையா கமலதாசன்  சந்திக்க சென்ற நிலையில் , குறித்த இடத்தில்வைத்து பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர்  தாக்கப்பட்டமை தொடர்பில்  நோர்வூட் பிரதேசசபை தவிசாளர் கைது செய்யபட வேண்டுமென வலியுறுத்தி  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டதோடு,  குழந்தை அரசியல்வேண்டாம், அதிகாரபோர்வையில் அராஜகமா, கிராமசேவகரை சந்திக்க குழுந்தையின்அனுமதி வேண்டுமா, பாட்டாளி வர்க்கத்தின் பிள்ளைகள் உமக்கென கிள்ளு கீரையா போன்ற பதாதைகளை ஏந்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

29.01.2021. வெள்ளிகிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாரம்பரமத்தின் பிரத்தியோக செயலாளர் சுப்பையா கமலதாசன் கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராம உத்தியோகத்தரை சந்தித்து கடிதம் ஒன்றை பெற்று கொள்ள சென்ற வேலையில் குறித்த காரியாலயத்திற்கு முன்பாக வந்த நோர்வூட் பிரதேசசபையின்தவிசாளர் ரவிகுழுந்தை வேல் தன்னை தாக்கி கீழே தள்ளிவிட்டதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர்  சுப்பையா கமலதாசன்டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

 நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கைது செய்யப்பட்ட விடயத்தினை அறிந்த ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *