எம்.கிருஸ்ணா

தலவாகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 05. ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.
ஹொலீரூட் தோட்டத்திற்கு சொந்தமான கருப்பன் தேயிலை காட்டுப்பகுதியிலே 02/03/2021 மதியம் 12 மணியளவில் தீ பரவியுள்ளது.

தீ பரவலையடுத்து தோட்ட நிர்வாகமும் பொது மக்களும் இணைந்து கடும் பிரயதனத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இராணுவத்தினர் உதவிக்காக வருகைத்தந்திருந்த போதும் பொது மக்களின் முயற்சியால் தீ பரவல் கட்டுப்பட்டுக்கு கொட்டுவரப்பட்டது .

இனந் தெரியாதோரால் காட்டுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மலையகத்தில் தொடரும் வறட்சி கால நிலையால் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள காடுகளுக்கு தீ வைக்கும் விசம செயல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
