ஜூன் 14 இல் நாடளாவிய ரீதியில் பயணத்தடையை நீக்குவது சாத்தியமில்லை


நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 14ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பயணத்தடையை நீக்குவது சாத்தியமில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.


பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பலர் வழக்கம் போலவே நடந்துகொள்கின்றனர். பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் 90 சதவீத மக்களின் பயணங்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தங்களால் எதிர்பார்த்த விகிதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை .


நகரங்களிலும் கொழும்பிலும் உள்ள ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் அத்தியாவசிய சேவைகளாகச் செயற்படுகின்றன்.

அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் ஊழியர்களை அழைக்கிறார்கள். தொழில்களில் எந்தவொரு பொதுப்போக்குவரத்து முறையும் செயற்படவில்லை. அதற்கு பதிலாக, மக்கள் தங்கள் தனியார் வாகனங்களில் பயணம் செய்கிறார்கள் என்றும் ரோஹண மேலும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *