கெரோனா தொற்று சிகிச்சை நிலையத்திலிருந்து பரீட்சை எழுதும் மாணவர்கள்!

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற 4 மாணவர்கள் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி தற்போது அவர்கள் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 இடைநிலைப் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த வண்ணமே தற்போது அவர்கள் பரீட்சையை எழுதி வருகின்றார்கள்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இறுதி வருட இரண்டாம் தவணைப் பரீட்சையையே அவர்கள் இவ்வாறு எழுதி வருகின்றார்கள்.

எமது 4 மாணவர்கள் கெரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 இடைநிலைப் பராமரிப்பு நிலையத்திற்கு அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இந்நிலையில் எமது மாணவர்களுக்குரிய பரீட்சை 29, 30, 31, ஆகிய
3 நாட்களும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைபெற்று வரும் மாணவர்கள் பரீட்சை எழுதுவதங்குரிய நடவடிக்கைகளை இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக் கழகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் எமது பல்கலைக் கழகத்தின் உப வேந்தரின் அனுமதியுடன்;துணிந்து செயற்பட்டு, சகல வைத்திய நெறிமுறைகளையும், பின்பற்றி, பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையில் இருந்தவண்ணமே பரீட்சைக்குரிய மண்டப ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு எமது 4 மாணவர்களும். தற்போது பரீட்சை எழுதிவருகின்றார்கள், என கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி தெரிவித்தார்.

Thank you – Trueceylon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *