உதவிக்கரம் நீட்டிய தொழிலாளர் தேசிய சங்கம்

நுவரெலியா டயகம பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர் மயில்வாகனம் உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பழனி திகாம்பரம் அவர்களின் வழிகாட்டலில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட டயகம கிழக்கு மற்றும் டயகம மேற்கு பிரிவு மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் நேரடியாக டயகம பகுதிக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் பாதிப்புக்குள்ளான மக்களை சந்தித்து உரையாடியதுடன் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தார்.

இதன் மூலம் சுமார் 65 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண பொதிகளை பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *