இ தொ கா இளைஞர் அணியின் நானுஓயா பிரதேச இளைஞர்களுக்கான கூட்டம்

இ தொ கா இளைஞர் அணியின்  நானுஓயா பிரதேச இளைஞர்களுக்கான கூட்டம்  நானுஓயா மகாத்மா காந்தி மண்டபத்தில் நடைபெற்றது .


 இதன்பொழுது பிரதேச இளைஞர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள், விளையாட்டு திறமைகளை அதிகரிக்கும் செயற்திட்டம் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது.


மேலும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின்  ஆலோசனையின் படி பிரதேச இளைஞர்களின் கடினப்பந்து கிரிக்கட் திறமைகளை விருத்தி செய்ய ஒருதொகை விளையாட்டு  உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டதோடு அவர்களுக்கான பயிற்சி வசதிகள் மேற்கொள்ள வசதிகளும் ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டது . 


இந் நிகழ்வில் இ தொ கா இளைஞர் அணி தலைவர்  ராஜமணி பிரசாந் , பொது செயலாளர்  அர்ஜூன்  நுவரேலியா கிரிக்கட் சங்கத்தின் செயலாளர் ஜகத் ஜயசுந்தர இலங்கை தேசிய கரப்பந்து குழாமின் பயிற்சியாளர்  மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வர்த்தகர்   திருச்செல்வம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *